3.12.2018

துளி . 150

            தவிப்பு
தேடி அழிக்கிறேன்
அலைப்பேசியில்
மறுபடியும் பேசவிரும்பாத 
நபர்களின் பெயர்களை
எவ்வித நெருடலுமில்லாமல்
நீக்கி விடுகிறேன்
என்னை விலக்கி
சென்றவர்களின் பெயரையும்
செய்வதறியாது
திகைத்து நிற்கிறேன்
மரணித்தவரின்
எண்ணை கண்டதும் 

இனி பயனில்லை
என்றாலும் எளிதில்
நீக்க முடிவதில்லை
அந்த பெயரை...

                                             o5.03.2018.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நான் பார்த்த படங்கள் - 2025

  நான் பார்த்த படங்கள் - 2025 சனவரி: 01. 2024 - Max – Vijay Karthikeyaa – Kanndam. 02. 2024 – Emilia Perez – Jacques Audiard – Spani...