9.27.2018

பதிவு . 11



நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று ஒரே நாளில் ஆகஸ்ட் மாட படச்சுருள் இதழை (சுற்றுச் சூழல் சினிமா சிறப்பிதழ்) வாசித்து முடித்தேன். சுற்றுச் சூழல் சார்ந்து உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படங்கள் மற்றும் ஆவணப் படங்கள் குறித்து பத்து கட்டுரைகள் இந்த இதழில் வந்துள்ளன. அவற்றில் சில கட்டுரைகள் பற்றிய என்னுடைய எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

யமுனா ராஜேந்திரனின் ”பூப்பூக்கும் மரம், விஷம் பரவும் காற்று, சபிக்கப்பட்ட மழை’’ என்ற கட்டுரை கன்னடம்,தமிழ்,மராத்தி மொழிகளில் வெளிவந்த மூன்று திரைப்படங்களில் சுற்றுச் சூழல் சீர்கேட்டை எப்படியெல்லாம் பதிவு செய்துள்ளார்கள் என்பதை சிறப்பாக விளக்குகிறது. அந்த கன்னடப்படத்தை உடனே பார்க்கும் ஆவல் எனக்குள் ஏற்பட்டுள்ளது.

அவதார் திரைப்படத்தை முன்வைத்து தி.குலசேகர் எழுதியுள்ள கட்டுரையில் பேராசை பிடித்த மனிதர்கள் எப்படியெல்லாம் பேரன்போடு வாழும் மக்களை அடிமைகொள்ள நினைக்கிறார்கள் என்பதை கவிதை மொழியில் அழகாக பதிவு செய்துள்ளார். 
போபால் விஷ வாயு பேரழிவு பற்றி லெட்சுமி நாராயணன் பி எழுதியுள்ள “வஞ்சிக்கப்பட்ட நீதியும், மழைக்காண வேண்டுதலும்” கட்டுரையை வாசித்து முடித்துமே என் மனம் பேரமைதியை உணர்ந்தது. நிம்மதியை குலைக்கும் பேரமைதியிது. போபால் கொலைகள் பற்றி ஒரு படம் வந்திருக்கிறது என்பதே எனக்கு புதுசெய்தி, இந்த கட்டுரையை வாசித்ததும் அந்தப்படத்தை உடனே பார்க்க வேண்டுமென திட்டமிட்டுள்ளேன்.

உணவுக்காக உருவாக்கப்படும் மாடு,கோழி,பன்றி பண்ணைகளில் ஏற்படும் சீரழிவுகள், பாலித்தீன் குப்பைகள் மூலம் சூழல் சீர்கேடு, வளர்ச்சியின் பெயரால் அரசுகள் நிலம் கைப்பற்றுவதினால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் டால்பின் வேட்டை என பல ஆவணப்படங்கள் பற்றிய கட்டுரைகளும் இந்த இதழில் வெளிவந்துள்ளன. படச்சுருள் குழுவினருக்கும் கட்டுரையாளர்களுக்கும் பாராட்டுகள்.

                                                                                                              16.09.2018



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திரை.24 / Santosh

  Santosh / Sandhya Suri / 2024 / Hindi இந்திய ஒன்றிய அரசால் தடைசெய்யப்பட்டுள்ள இந்தி மொழி திரைப்படம் சந்தோஷ். இதனை இயக்கியவர் சந்தியா சுரி....